×

வேப்பலோடையில் வட்டார விளையாட்டு போட்டி

குளத்தூர், பிப். 12: குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் நேருயுவகேந்திரா மற்றும் அன்னை தெரசா கிராம பொது நலச்சங்கம் சார்பில் இளையோர் மன்றங்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்து போட்டிகளை துவக்கிவைத்தார். உதவி தலைமை ஆசிரியை புளோரிடா, ராஜபாண்டி, புங்கராஜ், முதுகலை ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஆசிரியை அனுசுயா, லட்சுமிகாந்தன், நாகராஜன், கருப்பசாமி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திராவின் பல்நோக்கு பணியாளர் இசக்கி வரவேற்று பேசினார். அன்னை தெரசா சங்க செயாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கபடி, வாலிபால், துரோபால், கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பேட்டிகள் நடந்தன. வேப்பலோடை அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ், கோடாங்கிபட்டி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அசோக்குமார் ஆகியோர் போட்டிகளை வழி நடத்தினர். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை நேரு யுவகேந்திரா சார்பில் ராகவன், தென்மண்டல அனைத்து கலைசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரையரசன், யோகா பயிற்றுனர் செல்வி, ஆர்த்தி ஆகியோர் வழங்கினர். மாரிச்செல்வம் நன்றி கூறினார்.

Tags : Neoplane Regional Game Match ,
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்