×

இந்து முன்னணி கூட்டம்

உடன்குடி, பிப். 12: உடன்குடி அருகே உள்ள தைக்காவூரில் இந்து முன்னணி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிளை தலைவர் ஜெகன் தலைமை வகித்தார். துணை தலைவர் விஜய் முன்னிலை வகித்தார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்குவது, தைக்காவூரில் மதம் மாற்றும் நோக்கில் வெளியூரில் இருந்த வந்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொன்முத்து, பிரகாஷ், வேல்குமார், அஜய், விக்னேஷ், நிர்வாகிகள் சந்திரமோகன், முருகன் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் கேசவன் பேசினார். லிங்கேஷ் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...