×

நாசரேத்தில் கராத்தே தேர்வு போட்டி

நாசரேத்,பிப். 12: நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் கராத்தே கருப்பு பட்டய தேர்ச்சி போட்டி நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட கராத்தே தலைமை மாஸ்டர் பரேம்குமார் தலைமை வகித்து மாணவர்களை தேர்ச்சி செய்தார். மாணவர்கள் பாஸ்கர், உமர் சிறப்பு தேர்ச்சி பெற்றனர். சிறப்பு விருந்தினராக நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் ,ஏட்டு முருகன், காவலர் ராபின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கராத்தே கருப்பு பட்டயமும், சான்றிதழ்களும் வழங்கினர்.   ஆலன் திலக் கராத்தே மாஸ்டர் டென்னிசன் பயற்சி அளித்தார். ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் அருண், அருள், வினோத் செய்திருந்தனர்.

Tags : Karate selection competition ,Nazareth ,
× RELATED நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை