×

வனப்பகுதியில் தீயை அணைப்பது குறித்த செயல் விளக்கம்

வத்திராயிருப்பு, பிப். 12: வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், வனப்பகுதியில் தீப்பிடித்தால், அதை எப்படி அணைப்பது என வனத்துறையும், தீயணைப்புத்துறையும் இணைந்து செயல் விளக்கம் காண்பித்தனர். இதில், வனப்பகுதியில் பரவும் தீயை விரைவாக எப்படி அணைப்பது, வனவிலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல தடுப்பு முறைகளை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனக்காப்பாளர் முகமது சாபா, உதவி மாவட்ட வனக்காப்பாளர் அல்லிராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி, வனச்சரக அலுவலர்கள் வேலுச்சாமி, சுப்பிரமணியன், வத்திராயிருப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள் வனவர்கள், முத்து கூடலிங்கம், மகேஸ்வாி மற்றும் வனத்துறை தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரி சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்