×

தேனி டிகேஎஸ் ஐடிஐயில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

தேனி, பிப். 12: தேனி கம்மவார் சங்கம் ஐடிஐயில் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தேனி கம்மவார் சங்கம் ஐடிஐயில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் தேனி கம்மவார் சங்கம் ஐடிஐ இணைந்து வேலைவாய்ப்பு வழிகாட்டி நெறிமுறைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐடிஐ முதல்வர் பிரகாசம் வரவேற்றார். ஐடிஐயின் செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். இதில் தேனி கம்மவார் சங்க பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, உதவி வேலைவாய்ப்பு அலுவலர் யோகேஷ்குமார், முன்னாள் படைவீரர் நல அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமின்போது, ரயில்வே, முப்படைகளில் பணிக்கு சேருவது குறித்தும், இதற்கான தேர்வுகளை எதிர்கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் ஐடிஐ ஆசிரியர்கள் அனினேஷ், கோவிந்தசாமி, சாந்தகுமார், நேசராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Internship Training Camp ,Theni TKSS ITI ,
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்