×

காமயகவுண்டன்பட்டியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

கம்பம், பிப்.12: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் தோல் நோய் சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு, அதன் தன்மைகள், பரவும் விதம், தடுப்பு வழிமுறைகள், சிகிச்சை முறைகள், ஊனத்தடுப்பு வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக விளக்கி கூறப்பட்டது. முகாமில் தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ரூபன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன், மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா, கேகே.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Leprosy Awareness Camp ,Kamayakoundpattu ,
× RELATED செய்யாறு அருகே அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்