×

பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகள் ஆலோசனைக் கூட்டம்

சிங்கம்புணரி, பிப்.12:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வாங்கிய பயனாளிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் முன்னிலை வகித்தார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வாங்கிய அனைவரும் வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து கட்டிட பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இந்த பயனாளிகளின் குடியிருப்புகளுக்கு தேவையான கட்டுமான பணிக்கு அதன் உபகரணங்கள் மற்றும் சாமான்கள் தரமான பொருள்களாகவும் அதனை குறைவான மதிப்பீட்டில் வாங்குவதற்கும், கட்டிடப் பணிகளை நிறைவு செய்வதற்கும் ஆலோசனை கூட்டத்தில் பெரியய்யா சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி செயலாளர் செல்வ,ம் கிராம மக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...