×

கமுதி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கமுதி, பிப்.12:  கமுதியில் கொசுக்கள் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. கமுதியில், மர்ம காய்ச்சலால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 பச்சிளம் குழந்தைகள் இறந்தது. இப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மர்ம காய்ச்சலை தடுக்கும் விதத்தில், பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் வினோதினி தலைமையில் தீவிரமாக காய்ச்சல் ஒழிப்பு பணி நடைபெற்றது.கமுதி மற்றும் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீடுகளில் காய்ச்சல் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பெரிய எந்திரங்கள் மூலம் புகை மருந்து அடித்து முதிர் கொசுக்கள் ஒழிப்பு பணி நடைபெற்றது. நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மூத்த பூச்சியியல் வல்லுநர் பால விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில்,
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொன்னு பாக்யம் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : Kamudi ,area ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி