×

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சாயல்குடி, பிப். 12:  தினகரன் செய்தி எதிரொலியாக முதுகுளத்தூர் பேரூராட்சியில் கடைகளிலிருந்து சுமார் 100 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். கடந்தாண்டு ஜன.1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கடைகளில் பயன்பாட்டிலுள்ள 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூர், கடலாடி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நேற்று தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை ஊழியர்கள் மேற்கொண்டனர். செயல்அலுவலர் மாலதி தலைமையிலான ஊழியர்கள் சுமார் 100 கிலோ எடை மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை