×

வாடிப்பட்டியில் மாவட்ட கராத்தே போட்டி

வாடிப்பட்டி,பிப். 12: வாடிப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் திரளான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி நீரேத்தானில் உள்ள கணேசா கராத்தே புடோகான் பயிற்சிபள்ளி சார்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு பள்ளி தாளாளர் டெல்பின் தலைமை வகித்தார். சார்லஸ் பள்ளி முதல்வர் குழந்தைஅருள், வி.எம். பள்ளி முதல்வர் கணேசன், புஸ்கோஸ் பள்ளி தாளாளர் கேத்ரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி ஆசிரியர் சங்கீதா வரவேற்றார். பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் போட்டிகளை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் வாடிப்பட்டி, மேட்டுப்பட்டி, குட்லாடம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிபள்ளி நிர்வாகக்குழு தலைவர் இளவரசன், செயலாளர் முருகதாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் சென்சாய் செல்வகணேஷ் நன்றி கூறினார்.

Tags : District Karate Competition ,Wadipatti ,
× RELATED மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள...