×

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் மூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு

மதுரை, பிப்.12:  யானைமலை ஒத்தக்கடையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என மூர்த்தி எம்.எல்.ஏ. கூறினார். மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் ஒத்தக்கடை மைதான வளாகத்தில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்து கூறியதாவது:-திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் பிப்ரவரி 23ம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடக்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் 2 லட்சம் பேரை திமுகவில் இணைத்துக் கொள்கிறார். இதில் எழுச்சியூட்டும் வகையில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினர் லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தவிர இந்த மாவட்டத்திள்ள இளைஞரணியினர் மட்டும் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உறுதி அளித்து இருக்கிறீர்கள். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த விழா அரசியலில் திருப்புமுனை உண்டாக்கும். தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இவ்வாறு கூறினார். கூட்டத்துக்கு மதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏபி.ரகுபதி முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, மதன்குமார், நிர்வாகிகள் பாலாண்டி, அய்யப்பன், அழகுபாண்டி, விமல், வினோத், சுரேஷ், கருப்பாயூரணிசுரேஷ், பிரபு, ராகுல் மற்றும் இளைஞரணியினர் பங்கேற்றனர்.

Tags : MK Stalin ,assembly elections ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...