×

மேலூர் பஸ்ஸ்டாண்ட் முன்பு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம்

மேலூர், பிப். 12: மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு கலை நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடைபெற்ற மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, மதுவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கி நாடகம் நடித்து காண்பிக்கப்பட்டது.இதை பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கண்டு ரசித்தனர். அரசே டாஸ்மாக் என்ற பெயரில் மது அருந்த சொல்லிவிட்டு, அதே அரசே மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் நடத்துகிறதே, இதுவே பெரிய நாடகம் தான் என பொதுமக்கள் கிண்டலாக பேசினர். இந்நிகழ்ச்சியில் மேலூர் மதுவிலக்கு போலீசாரும் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags : Melur Bus Stand ,
× RELATED முகப்பு பணிகள் முடிவது எப்போது...