×

மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு ஜல்லிக்கட்டு காளை பலி

மணப்பாறை, பிப்.12: மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு ஜல்லிக்கட்டு காளை பலியானது. பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் கடந்த 9ம் தேதியன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட காளை ஒன்று மணப்பாறை ரயில் நிலைய தண்டவாள பகுதியில் ஓடியபோது நெல்லையிலிருந்து ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி காளை இரண்டு துண்டுகளாக சிதறி பலியானது. இது போல நேற்றும் ரயில் மோதி மற்றொரு காளை பலியாகிவிட்டது. இது தவிர, மஞ்சம்பட்டிக்கு முன்னர் பொத்தமேட்டுப்பட்டியில் கலந்துகொண்ட பல காளைகளும் காணாமல் போனதால்,

அதன் உரிமையாளர்கள் பல இடங்களில் இன்னமும் பல குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர். இதுபற்றி, காளை உரிமையாளர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை வாடிவாசலிலிருந்து கயிற்றோடு வெளியில் விட அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இதனால், ஆவேச பாய்ச்சலுடன் செல்லும் காளைகளை கயிறு வீசினாலும் பிடிக்க முடியவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொண்டு வந்த பல காளைகளை காணாமல் உரிமையாளர்கள் பலர் இன்னும் தேடி வருகின்றனர்.

Tags : train accident ,
× RELATED ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு அதிகரிப்பால் விலை கிடுகிடு உயர்வு