×

பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி, பிப்.12: தஞ்சை மாவட்டம் மகர்நோம்புச்சாவடி ராமசாமி பேட்டை தெருவை சேர்ந்தவர் நசீர்அகமது (52). இவர் வேலை விஷயமாக நேற்று முன்தினம் திருச்சி மத்திய பஸ்நிலையம் வந்தார். இ்ங்கு தஞ்சை பஸ் நிற்கும் பஸ் நிலையம் அருகே நின்றபோது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் இவரது சட்டைப்பையில் இருந்து ரூ.500 பறித்து சென்றார். சுதாரித்த நசீர்அகமது திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து கன்டோன்மென்ட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்த வெற்றிவேல்(36) என்பது தெரியவந்தது. வழக்குப்பதிந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Money Laundering Man ,
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது