×

தவறி விழுந்து பெண் பலி

திருச்சி, பிப். 12: திருச்சி மலைக்கோட்டை மீனாட்சி சுந்தரம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சீத்தாலட்சுமி (40). கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன் சீத்தாலட்சுமி தாயார் உடல் நலம் சரியில்லாமல் இறந்தார். அதுமுதல் சீத்தாலட்சுமி, மனநிலை பாதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது திடீரென சீத்தாலட்சுமி தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீத்தாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...