×

விண்ணப்பிக்க அழைப்பு பெல் கைலாசபுரத்தில் 16ல் குறும்பட தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

திருச்சி, பிப்.12: குறும்படம் எடுப்பது எப்படி என்பது குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி முகாம் பெல் கைலாசபுரத்தில் வரும் 16ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தேனீக்கள் திரைப்பட சங்கம் சார்பில், சிறந்த குறும்படம் எடுப்பது எப்படி? என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு பெல் கைலாசபுரம் சிஐடியூ அரங்கில் நடைபெற உள்ளது. கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்புவோர் 9842401401, 9443838401 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தலைவர் கவிஞர் நந்தலாலா, செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Training Camp ,Bell Kailasapuram ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...