×

துறையூர் கிளை நூலகத்திற்கு வெளிநாட்டு நுலகர்கள் விசிட்

துறையூர், பிப்.12: துறையூர் கிளை நூலகத்திற்கு வெளிநாட்டு நூலகர்கள் வருகை தந்து செயல்பாடுகளை கேட்டறிந்தனர். இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் இன்டர்நேஷனல் நெட்வொர்க் எமர்ஜிங் லைப்ரரி இன்னோவேட்டர்ஸ் அமைப்பை சார்ந்த மாலத்தீவு, மியான்மார், லங்கா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய இடங்களில் பணிபுரியும் நூலகர்கள் துறையூர் கிளை நூலகத்தை பார்வையிட்டனர். அவர்களுக்கு கிளை நூலக வாசகர் வட்டமும், ரோட்டரி சங்கமும் இணைந்து சிறப்பான வரவேற்பளித்தது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற புள்ளியல் துறை அலுவலர் தில்லைநாயகம், ரோட்டரி சங்க தலைவர் ராமகிருஷ்ணன், வாசகர் வட்ட உறுப்பினர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்றவர்களை வாசகர் வட்ட உறுப்பினர் கலியமூர்த்தி வரவேற்றார்.

இன்டர்நேஷனல் நெட்வொர்க் எமர்ஜிங் லைப்ரரி இன்னோவேட்டர்ஸ் அமைப்பை சார்ந்த கிரிஜா மற்றும் ரோஜா தலைமையில் நமது நாட்டில் உள்ள நூலக செயல்பாடுகள் பற்றி தெற்காசிய நாடுகளில் உள்ள நூலகர்களை தேர்வு செய்து அழைத்து வந்து துறையூர் கிளை நூலக செயல்பாடுகளையும் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் வாசகர் வட்ட செயல்பாடுகளையும் கேட்டறிந்தனர். விழாவில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் கலந்துகொண்டு நூலகத்தின் செயல்பாடு மக்களுக்கு எவ்விதம் சேவை செய்கிறது என்பது குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் நூலக வார விழாவின்போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு நூலகர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நூலகத்தில் அவரவர்களின் செயல்பாடுகள் குறித்து நூலகர்களிடையே கலந்துரையாடல் மற்றும் திரையில் விளக்கப்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. விழாவில் வாசகர் வட்டத் துணைத்தலைவர் வேணுகோபால், உறுப்பினர்கள் தேவராஜ், ரெங்கராஜ் மற்றும் நூலகப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி, திலகவதி, கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

Tags : Visitors ,Foreign Library ,
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...