×

பழமையான பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்

லால்குடி, பிப்.12: லால்குடியை அடுத்த புள்ளம்பாடியில் உள்ள பழைமையான பழுதடைந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் உள்ளது. இதற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வர வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு கூட்டம் கூட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் தலைைமை வகித்து பேசுகையில், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவராக எனக்கு இந்த நல்வாய்ப்பினை வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்எல்ஏ சவந்தரபாண்டியன் மற்றும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து கூட்டத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்கைளையும் நிறைவேற்றி பணிகள் செய்திட உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோஸ்பின் ஜெசிந்தா முன்னிலை வகித்தார். மேலாளர் நாகராஜன் தீர்மான அறிக்கை வாசித்தார். கோடை காலங்களில் வரும் குடிநீர் பிரச்னையை போக்க அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் வாழ்வாதாரத்திற்கு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளாகி தற்போது பழுதைடைந்து காணப்படுகிறது. புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட நிதி வழங்க அரசு முன்வரவேண்டும் என உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர். நிறைவாக ஒன்றிய குழு துணைத்தலைவர் கனகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : panchayat union office building ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...