×

அயோத்தியாப்பட்டணம் அருகே சிதிலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

அயோத்தியாப்பட்டணம், பிப்.12: அயோத்தியாப்பட்டணம் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அயோத்தியாப்பட்டணம் அருகே சேலத்தில் இருந்து அரூர் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில், நாள்தோறும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு என பலர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த சில மாதமாக குண்டும்,குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து, காயமடைகின்றனர். விபத்து ஏற்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். எனவே, சிதிலமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags : Motorists ,road ,Ayodhya ,
× RELATED சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை...