×

சேலம் சிறை தியாகிகள் நினைவுதின ஊர்வலம்

சேலம், பிப்.12:  சேலத்தில் சிறை தியாகிகள் நினைவுதின ஊர்வலம் நடந்தது. ஒன்றுபட்ட மாகாணமாக இருந்த தமிழகம், மலபார், ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், சேலம் மத்திய சிறை எதிரே உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போதைய சிறை நிர்வாகம் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். அதனுடைய 71வது ஆண்டு நினைவுதினம்  நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன்படி, சேலம் மத்திய சிறை அருகே சேலம் சிறை தியாகிகள் நினைவுதினம், அணிவகுப்பு மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி  நடந்தது. இதற்கு கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ், கிழக்கு மாநகர செயலாளர் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமகிருஷ்ணா பார்க் அருகே உள்ள கட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர். இதில் வெங்கடபதி, சேதுமாதவன், குழந்தைவேல், வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : Salem Prison Martyrs Memorial Procession ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது