×

தினமும் மாலையில் குற்ற சம்பவங்களை தடுக்க வசதி முத்துப்பேட்டை போலீசாருக்கு 4 கண்காணிப்பு கேமராக்கள்

முத்துப்பேட்டை, பிப். 12: முத்துப்பேட்டை நகரில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மேலும் அதிகரிக்க அடகுக்கடை சங்கத்தினர் 40 ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள 4 கேமராக்களை வழங்கினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி மட்டுமின்றி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் பகுதியாகும். இதுபோன்ற குற்ற சம்பவங்களால் சென்ற ஆண்டுகளில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் சென்றாண்டு காவல்துறை சார்பில் முத்துப்பேட்டையில் உள்ள முக்கிய பகுதிகள், ஊருக்கு எல்லையில் உள்ள பகுதிகள், ஜாம்புவானோடை மற்றும் தர்கா பகுதிகள் உட்பட 42 இடங்களில் நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு அறை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது.

இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை சரியாக அடையாளம் காணுவதுடன் காவல்துறையின் துரித நடவடிக்கைகளுக்கும் பெரும் உதவியாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. இதனால் சமீபகாலமாக முத்துப்பேட்டை நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் பெருமளவில் குற்ற சம்பவங்கள் குறைந்து விட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் நிம்மதி ஏற்பட்டது மட்டுமின்றி மகிழ்ச்சியும் அடைந்து காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டையில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் முத்துப்பேட்டையில் உள்ள அடகுக்கடைக்காரர்கள் சங்கத்தினர். தங்கள் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினருக்கு வழங்க முன்வந்தனர்.

அதன்படி நேற்று சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 கண்காணிப்பு கேமராக்களை சங்கத்தின் நிர்வாகிகள் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேசிடம் வழங்கினர். இதனால் மகிழ்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் அடகு கடைக்காரர்கள் சங்கத்தினரை பாராட்டினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கூறுகையில், முத்துப்பேட்டை பகுதி முழுவதும் தற்பொழுது வைக்கப்பட்டுள்ள 42 கண்காணிப்பு கேமராக்கள் எங்களது நடவடிக்கைக்கு பெரும் உதவியாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகளவில் குறைந்து விட்டது. தற்போது மேலும் கண்காணிப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் அடகு கடைக்காரர்கள் சங்கத்தினர; 4 கேமராக்களை வழங்கி உள்ளனர். அவை முக்கிய பகுதியில் பொருத்தப்படும் என்றார்.

Tags : police station ,crime incidents ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்