×

தி.பூண்டி மூலக்கரை பள்ளியில் முதியவர்களுக்கான உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முகாம்

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மூலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில திருத்துறைப்பூண்டிபாரதிதாசன் மாதிரிக் கல்லூரி சமூக பணித்திட்ட மாணவர்கள் சார்பில் முதியவர்களுக்கான உடல்நலம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

பேராசிரியர்கள் பிரீத்தி, ராஜகுமாரி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் லாவண்யா, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர் ஜானகிராமன் ஆகியோர் முதியோர் பிரச்னைகள் , உடல்நலம் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசினர். சமூக பணித்துறை மாணவி நாகஜோதி, சரண்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர், முடிவில் மாணவி சிவப்பிரியா நன்றி கூறினார்.

Tags : Awareness Camp ,Persons ,Thundi Moolakkari School ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்