×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை, பிப். 12: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளத்தில் திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனத்தூய்மை என்னும் தலைப்பில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பேசினார். நிர்வாகி அசாருதீன் ஆண்டு கணக்கு சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து முகமது சித்திக் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக ஒழுங்குகள் குறித்து மாநில செயலாளர் அன்சாரி எடுத்துரைத்தார்.

மாவட்ட நிர்வாக தேர்தலை மாநில செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நடத்தினார். இதில் மாவட்ட தலைவராக முகமது மிஸ்கின், மாவட்ட செயலாளராக யாசர் அரபாத், மாவட்ட பொருளாளராக ஹாஜா மைதீன், மாவட்ட துணை தலைவராக அன்சாரி, மாவட்ட துணை செயலாளர்களாக முகமது சித்திக், அப்துல் ஹமீது, ஹாஜா மைதீன், முகமது அசாருதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 15முதல் மார்ச் 15 வரை ஒரு மாத கால பிரசாரத்தை மேற்கொள்வது, அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ராஜேந்திர பாலாஜி பொறுப்புடன் பேச வேண்டும். மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் அரசு ரத்ததான வங்கி அமைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Assembly ,Nasikkulam Dawheed Jama'at ,
× RELATED குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு...