×

பெண் குழந்தைகளை பெற்றோரை தவிர யாரும் தொட அனுமதிக்க கூடாது

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க கட்டிடத்தில் சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பாரதமாதா குடும்பநல நிறுவனம், ஜேசீஸ் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு (அங்கன்வாடி பணியாளர்கள்)திறன் வளர்ப்பு பயற்சி முகாம் நடைபெற்றது. பாராத மாதா தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். டாக்டர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலர் செல்வராசு வரவேற்றார். இதில் ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் கவுரி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம்,

குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நாகலெட்சுமி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா, வக்கீல் கந்தசாமி, சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்கள். பயிற்சி முகாமில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி பேசுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிலபெற்றோர்களிடம் விழிப்புணர்வு குறைவு. இங்குதான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்து வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் இந்த ஆண்டு இதுவரை 4 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை குழந்தையே சுமக்கும் சம்பவமும் இங்கு நடந்துள்ளது.

பெண் குழந்தைகளை பெற்றோர்களை தவிர வேறு யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து பயிற்சி ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் ஜேசீஸ் செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

Tags : anyone ,parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்