×

தி.பூண்டி வேளூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வரும் அவல நிலை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருத்துறைப்பூண்டி அருகே வேளூரில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கிய போது போடப்பட்ட குடிநீர் பைப்புகள் உடைந்து அடிக்கடி குடிநீர் வீணாக ஒடுவதை கண்டுபிடித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு சரி செய்வது வாடிக்கையான ஒன்று. கோடை காலம் வந்து விட்டால் திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அடிக்கடி போராட்டம்,

சாலை மறியல் நடைபெறுவதும் வழக்கம். இந்நிலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளூர் ஊராட்சிக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் பாதையில் வேளூர் பாலம் அருகில் வயல் ஓரமாக உடைப்பு ஏற்பட்டு கடந்த 5 நாட்களாக பல ஆயிரம் லீட்டர் குடிநீர் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வேளூர் ஊராட்சிக்கு குடிநீர் சீராக வழங்க முடியவில்லை. எனவே கோடை காலம், பொதுமக்கள் நலன் கருதி உடைந்த குடிநீர் பைப் லைனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : drinking water pipeline ,Bundi Vellore ,
× RELATED குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில்...