×

சேந்தமங்கலம் அருகே நாற்றங்கால் பண்ணைக்கு மாணவர்கள் களப்பயணம்

சேந்தமங்கலம், பிப்.12: சேந்தமங்கலம் அருகே அரசுப்பள்ளி மாணவ- மாணவிகள் நாற்றங்கால் பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். சேந்தமங்கலம்  அருகே ராமநாதபுரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 31  மாணவ -மாணவிகள் மற்றும் நடுக்கோம்பை நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவ-  மாணவிகள், ஆசிரியர்கள் சித்ரா, அன்புச்செல்வி, ராகவன், சிவக்குமார்  ஆகியோரது மேற்பார்வையில், கொல்லிமலை அடிவாரம் பகுதியில் உள்ள வனத்துறைக்கு  சொந்தமான நாற்றங்கால் பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

அவர்களை  வனக்காப்பாளர் மாதேஷ்வரன் வரவேற்று, நாற்றங்காலில் வளர்க்கப்படும்  மரக்கன்றுகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, அங்குள்ள சொர்க்கம்,  நாவல், புங்கன், சந்தனம், வேம்பு, ஈட்டி, வேங்கை, புளி, வாகை, மகிழ்  உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் குறித்தும் அவற்றை வளர்க்கும் முறைகள்  குறித்தும் விளக்கம் எடுத்துரைத்தார். மேலும், களப்பயணம் வந்த மாணவ,  மாணவிகளுக்கு இலவச நோட்டு பேனாக்களை வனக்குழு தலைவர் தினேஷ் வழங்கினார்.  முன்னதாக நாற்றங்கால் பண்ணை அருகில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட  மருத்துவ குடியிருப்பு கட்டிடம் மற்றும் குதிரை லாயம் ஆகியவற்றை  மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.

Tags : nursery ,Senthamangalam ,
× RELATED அரசு, தனியார் நிலங்களில் நடவு செய்ய...