×

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு பாராட்டு

பரமத்தி வேலூர், பிப்.12: தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துவரும் நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுத்தது. கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து ஆட்சேபனை எழுந்த நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததையடுத்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவரும், பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் செயலாளருமான ராஜா பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்தார். அப்போது, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் சென்னியப்பன், நாமக்கல் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Minister of Education ,Elections ,
× RELATED பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி