×

திருச்செங்கோட்டில் மலைப்பாதை சீரமைப்பு பணியை எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு, பிப்.12: திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வர் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணியை பொன்.சரஸ்வதி எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருமலை உள்ளது. இதன்மீது  அமைந்துள்ள மலைக்கோவிலுக்கு சுமார் 1200 படிகள் வழியாகவும், 3,5 கி.மீ., மலைப்பாதை வழியாகவும் செல்லலாம். படிப்பாதை பல நூறு ஆண்டுக்கு முன்பு குறுநில மன்னர்கள் மற்றும் காங்கேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் குளிக்க  பொய்கைகளும், தங்கிச் செல்ல வசதியாக மண்டபங்களும் படிப்பாதையில் உள்ளன.

வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் நலன்கருதி 1984ல் மலைப்பாதைக்கு காள்கோல் விழா நடத்தி இரு ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் முயற்சியால் மலைப்பாதை நிறுவப்பட்டது. மலைப்பாதை அமைத்து சுமார் 35 வருடங்கள் ஆகிவிட்டதால் பல இடங்களில் மழைநீர் புகுந்து அரித்து பாதையின் வலிமை  குறைந்துள்ளது. பாதையை அகலப்படுத்தி சீரமைத்து கற்களை அகற்றி காங்கிரீட் போடவும், மழை நீர் தேங்காமல் செல்லவும் சீரமைக்க ₹90 லட்சம் நிதியை தமிழக  அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி தீவிர முயற்சிகள் எடுத்து இந்த நிதியை அரசு ஒதுக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால், காலை 9 மணி முதல் மலைப்பதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை சீரமைப்பு பணிகளை நேற்று எம்எல்ஏ பொன்.சரவ்வதி பார்வையிட்டு ஆய்வு செயதார். ஒப்பந்ததாரரரிடம் விளக்கங்கள் கேட்டு பணியை செவ்வனே செய்து, விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். 

Tags : MLA ,Tiruchengode ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்