×

அறிவியல் மையத்தில் விதைப்பண்ணை பயிற்சி

கிருஷ்ணகிரி, பிப்.12: எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் 6 நாட்கள் விதைப்பண்ணை பயிற்சி துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மைத்துறை மற்றும் எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம் இணைந்து, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சியின் கீழ் 6 நாட்கள் விதைப்பண்ணை பயிற்சி அளிக்கிறது. இந்த பயிற்சியின் துவக்க விழாவில், அறிவியல் மையத்தின் தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான சுந்தர்ராஜ் வேளாண்மை அறிவியல் மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜக்குல்ல அகண்டராவ் தலைமை வகித்து பேசினார். உழவர் பயிற்சி வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம் தரமான விதையினை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்குவதால் மகசூல் அதிகரிப்பதுடன், அதிக வருமானமும் பெற முடியும் என்றார். அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) செந்தில்குமார், விதைப்பண்ணை பதிவு செய்தலின் பயன் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதில் கிருஷ்ணகிரி, கோதிகுட்லப்பள்ளி, கம்மம்பள்ளி மற்றும் பெத்தனப்பள்ளியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Science Center ,
× RELATED புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள்...