×

அரூர் பெரிய ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

அரூர், பிப்.12: பாப்பிரெட்டிபட்டி அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் பழனிவேல்(78). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனிவேல், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அரூர் பெரிய ஏரியில் முதியவர் சடலம் மிதப்பதாக, அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சடலமாக கிடந்தது பழனிவேல் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் சிவகுமார் அளித்த புகாரின்பேரில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Aurora lake ,
× RELATED சித்தாலப்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு