×

அரூர் பழையப்பேட்டையில் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை

அரூர், பிப்.12: அரூர் அருகே பழையப்பேட்டையில் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் ேரஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பழையப்பேட்டை 17வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள், அம்பேத்கார் நகர் மற்றும் சந்தைமேடு ஆகிய இடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில், பொருட்கள் வாங்கி வருகின்றனர். எனவே பழையப்பேட்டை பகுதியில், ஒரு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தன் ேபரில், எம்எல்ஏ மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், கடந்த 2016- 17ம் ஆண்டு ₹8 லட்சம் மதிப்பில் புதியதாக, ேரஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 8 மாதங்களாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags : Aroor ,ration shop ,
× RELATED ஊரடங்கின் போது பணியாற்றும் ரேஷன் கடை...