×

தர்மபுரி கலெக்டர் ஆபிசில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி சிறையிலடைப்பு

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த குறைதீர் கூட்டத்தில், தற்கொலைக்கு முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம், பாகலஅள்ளி காலனியை சேர்ந்தவர் சித்தன்(47). இவரது மனைவி ஆண்டிச்சி(37). இவர்கள் மகன் தேவராஜ்(22), செல்வி(20), உறவினர்கள் காளியம்மாள்(50), சித்தம்மாள்(40) மற்றும் 2 குழந்தைகளுடன், நேற்று முன்தினம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது, திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், சித்தனிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, சித்தன் உள்ளிட்டோரை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஆண்டிச்சி கூறுகையில், பாகல்பட்டி காலனியில் வசிக்கும் எங்கள் மீது தொப்பூர் போலீசார் பொய்யான வழக்கு பதிவு செய்து எங்களை கைது செய்கின்றனர். எங்கள் கிராமத்தில் எந்த குற்றம் நடந்தாலும் எனது கணவர், மகன்கள் மேல் குற்றம் சாட்டி, தொப்பூர் போலீசார் விசாரணைக்கு அழைக்கின்றனர். இதே போல், அடிக்கடி பொய் புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் எங்களை கைது செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்தன், ஆண்டிச்சி தம்பதியை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags : suicide ,Office ,Dharmapuri Collector ,
× RELATED வாலிபர் தற்கொலை