×

தர்மபுரியில் புதிதாக தேர்வான காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக தேர்வான காவலர்களுக்கு நேற்று அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. சீருடை பணியாளர் தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 491 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வுகளில் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் தேர்வான 491 புதிய காவலர்களுக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, எஸ்பி ராஜன் தலைமையில் நடந்தது. இதில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அனைவரது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. 2வது நாளான நேற்று, அனைவருக்கும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. இதையொட்டி புதிதாக தேர்வான காவலர்கள் அனைவரும் ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

Tags : examination ,Dharmapuri ,
× RELATED பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேரள பயணிகளுக்கு பரிசோதனை