×

குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று தெப்ப உற்சவம் நடக்கிறது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத் தேர்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 7 மணிக்கு சிவசுப்ரமணியசுவாமி திருவீதி உலா நடந்தது. 8ம் தேதி காலை 10 மணிக்கு பால்குடம் ஊர்வலம் மற்றும் சிவசுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சிவசுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. 9ம் தேதி மாலை 5 மணிக்கு, விநாயகர் ரதம் திருவீதி உலா நடந்தது. 10ம் தேதி சுப்ரமணியர் மகா ரதம் எனும் தேர்திருவிழா வடம் பிடிக்கும் விழா நடந்தது. மகாரதத்தை ஆயிரக்கணக்கான பெண்களே வடம் பிடித்து இழுத்தனர். இன்று (12ம் தேதி) சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை 13ம் தேதி சயன உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரகாஷ் மற்றும் செயல் அலுவலர் மல்லிகா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Sivasubramaniyaswamy Temple ,
× RELATED கொரோனா வைரஸ் காரணமாக தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் ரத்து?