×

சாலையோரத்தில் குவிப்பு விவசாய கருவிகள் விற்பனை தீவிரம்

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.12: பாப்பிரெட்டிப்பட்டி சாலையோரங்களில் விவசாய கருவிகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கி, பழைய இரும்பு பட்டைகளை வாங்கி விவசாய கருவிகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், மண் வெட்டி, கோடாரி, அரிவாள், கலப்பை, களை வெட்டும் களைவெட்டி, நிலத்தை உழவு செய்யும் கலப்பைக்கு தேவையான கொலு, கொடுவாள், வெட்டருவாள், கறிக் கடைக்கு தேவையான கத்திகள், கதிர் அறுக்கும் அரிவாள், கடப்பாரை, கோடாரி, சம்மட்டி, இரும்பு புட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் தேவைக்கேற்ப உடனடியாக தயாரித்து தருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான விதங்களில் விதவிதமாக செய்து ₹100 முதல் ₹700 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : roadside ,
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரம்