×

குற்றமற்ற இந்தியாவை யோகா மூலம் உருவாக்க முடியும்

ஓசூர், பிப்.12: யோகா தியானத்தின் மூலம் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என ஓசூரில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி, 4 நாட்கள் நடக்கும் இலவச யோகா பயிற்சியை, யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரணாயாமம், சூரிய நமஸ்காரம், சின்முத்திரா, மகாமுத்ரா போன்ற ஆரோக்கியத்துகான யோகா பயிற்சிகளை பாபா ராம்தேவ் கற்பித்தார். தொடர்ந்து உடல், மனம், ஆரோக்கிய மேம்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாபா ராம்தேவ் கூறுகையில், ‘உடல் உறுப்புகளை யோகாவினால் கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து யோகா செய்யும்போது உடலும், மனமும் கட்டுப்படும். யோகா செய்வதால் நோய்களுக்கு நிரந்தர தீர்வும், மனநிம்மதியும் கிடைக்கும். யோகா, தியானத்தால் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும். தினமும் ஒரு மணிநேரம் யோகா செய்யும் போது, உடல் வலிமை பெற்று ஆரோக்கியம் மேம்படும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாராஸ், கிரீஷ் உள்ளிட்ட பதஞ்சலி யோக குழுவினர் மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!