×

கும்பகோணம் அருகே ஊராட்சி பள்ளியில் ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம்

கும்பகோணம்,பிப்.12: கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளைமண்டபத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆபத்தான நிலையிலுள்ள பட்டுப்போன மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துபிள்ளைமண்டபத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், 25மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் இயங்கி வருகின்றது.இதனால் அவ்வளாகத்தில் பகல் நேரத்தில் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் என சென்று வருவார்கள்.பள்ளி மற்றும் அலுவலகங்களை சுற்றிலும்,பல்வேறு மரங்களை வைத்துள்ள நிலையில், வட்டார கல்வி அலுவலக வாயிலிலுள்ள ஒரு மரம் பட்டுப்போயுள்ளது.

இதனால் அந்த மரம், விழும் நிலையில் மிகவும் ஆபத்தான வகையில் உள்ளதால், பள்ளி மாணவர்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் எனஅனைவரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில், கடுமையாக வெயிலினால் பட்டுப்போன மரம், மேலும் காய்ந்து, கீழே விழும் போது, பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் மேல் விழுந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்படும். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும், கல்வித்துறை, அதிகாரிகளிடம் புகாரளித்தும், கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், , பட்டுப்போன மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ெபற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : panchayat school ,Kumbakonam ,
× RELATED 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு...