×

கும்பகோணம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், பேரணி

கும்பகோணம், பிப்.12: கும்பகோணத்தை அடுத்த முருக்கன்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொறுப்பாளர் பைசல் முகம்மது தலைமை வகித்தார். ஜமாத்தார்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமதுரபிக் முன்னிலை வகித்தனர். திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவிசெழியன், திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் திரிபுரசுந்தரி ஆகியோர் கண்டன உரையாற்றினார். தண்டதோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா (எ)சுந்தராஜன் நன்றி கூறினார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து முருக்கன்குடி கடைத்தெருவிலிருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பள்ளிவாசலை அடைந்தனர். தொடர்ந்து பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பேரணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர்.

Tags : Demonstration ,Kumbakonam ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை...