×

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இயந்திரம் இன்றி பணியாட்கள் மூலம் அறுவடை துவங்கிய விவசாயிகள்

சேதுபாவாசத்திரம்,பிப்.12: ேசதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இயந்திரம் இன்றி பணியாட்கள் மூலம் அறுவடை பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் இயந்திரம் இன்றி பணியாட்கள் மூலம் கதிர் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடை மடையில் நிரந்தரமாக சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. காரணம் இந்த ஆண்டு போதுமான அளவு குறைவில்லாமல் பருவ மழை பெய்தது மட்டுமின்றி மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வரை தண்ணீர் வந்தது. சம்பா சாகுபடி தற்போது அறுவடை நிலைக்கு வந்துள்ளது.

அதே சமயம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வரை மேட்டூர் அணை தண்ணீர் வந்ததால் அறுவடைக்கு உரிய கதிர் வயல்கள் அனைத்தும் ஈரப்பதமாக உள்ளது. இதனால் வயல்களில் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் செய்யமுடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.ஆகையால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது போல பணியாட்களை வைத்து கை மூலம் அறுவடை செய்து கை மூலமாகவே கதிரடிக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறுகையில், இயந்திரம் மூலம் அறுவடை பணி செய்வதினால் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும் வைக்கோல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு சேதமடையும்.

இருப்பினும் வேலை ஆட்கள் பற்றாக்குறை என்பதால் இதுவரை இயந்திரத்தை பயன்படுத்தி வந்தோம். அதே சமயம் வேலை சுலபம் என்றாலும் தற்போது வயல்வெளி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எனவே தான் பழைய நடைமுறையை கையாண்டு விவசாய கூலித்தொழிலாளிகள் மூலம்அறுவடையை தொடங்கியுள்ளோம். அத்துடன் பல பேருக்கு வேலை கொடுப்பதுடன் கால்நடைகளுக்கு போதுமான வைக்கோல் கிடைக்கிறது என்றனர்.

Tags : shop ,Sethupavasatram ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி