×

மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.12: தஞ்சையில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபால் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல், வங்கி, ரயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி, மின்சாரம், போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பெருமுதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை அளிப்பதை நிறுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை பறிப்பு, உணவு, உரம் தட்டுப்பாடு, சமூக நலத்திட்டங்களுக்கான மானியம் ரத்து, பெட்ரோல், டீசல், காஸ் விலை போன்றவைகளை சாமானிய மக்கள் மீது திணிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. சிஐடியூ நிர்வாகிகள் பேர்நீதி ஆழ்வார், கல்யாணி, செங்குட்டுவன், அன்பு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : CITU ,protests ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு