×

தஞ்சையில் 2 நாள் நடக்கிறது பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாட அனுமதிக்க கூடாது

தஞ்சை, பிப்.12: பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாட அனுமதிக்க கூடாது என அர்ஜூன் சம்பத் கூறினார். தஞ்சை பெரிய கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா மகுடாகமம் விதிப்படி நடைபெற்றுள்ளது. சிவபெருமானையும், சிவலிங்கத்தையும், பெரிய கோயிலையும் அசிங்கமாக பேசிய சீமானை பெரிய கோயிலுக்குள் அனுமதி அளித்தது தவறு. அவரை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். சீமானுக்கு பெரிய கோயிலில் சிறப்பு மரியாதை அளித்தது தவறானது.

ரஜினியையும், விஜயையும் இணைத்து பேசுவது தவறு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ரஜினி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் எழுதப்படாத அல்லது காட்டப்படாத சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதற்கு நான் தவறு செய்யவில்லை, கணக்கு எழுதாமல் விட்டு விட்டேன் என தெரிவித்திருந்தார். வருமானவரி துறையே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று பெரிய கோயிலில் காதல் ஜோடிகளை அனுமதிக்கக் கூடாது.

அதேபோல் பொது இடங்களிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. ஆன்மிக அரசியல் கொள்கையை முன்வைத்து வரும் 16ம் தேதி தஞ்சையில் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. 2021 தேர்தலில் ஆன்மிக கொள்கை கொண்ட கட்சிகளை இணைக்கும் செயலில் இந்து மக்கள் கட்சி ஈடுபடும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : places ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!