×

முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டிகள்

தஞ்சை, பிப்.12: 2019-20ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 18,19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப்பந்து, டென்னிஸ், ஹாக்கி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படாது. தடகள விளையாட்டில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 31.12.2019 அன்று 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியானவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இப்போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.1000ம், 2ம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.750, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்வோர் தங்களது வங்கி பாஸ் புத்தகத்தை கொண்டு வர வேண்டும். இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : CM Cup ,
× RELATED முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்று