×

திருவையாறு அருகே அரசகுடியில் வயல்வெளி பயிற்சி முகாம்

திருவையாறு.பிப்.12: திருவையாறு அடுத்த அரசகுடி கிராமத்தில் வேளாண்துறை சார்பில் நிலவள, நீர்வள திட்டத்தின்கீழ் நெல் வயல்வெளி பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் 25 சிறு, குறு முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். பயிற்சி முகாமை வேளாண்மை உதவி இயக்குனர் சரசு துவக்கி வைத்தார். பயிற்சியில் வேளாண்மை துணை அலுவலா் குணசேகரன் கலந்துகொண்டு வயல் சூழல் ஆய்வு,

பயிற்சிக்கு முன் நடைபெற்ற பயிற்சி வகுப்பை நினைவு கூறுதல், நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், வானிலை நிலவரம் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் சுதாகர் தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்தார்.

Tags : Field Training Camp ,Rajagudi ,Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு தவில் வலைக்கு புவிசார்...