×

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.12: தஞ்சையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை ஸ்டேட் வங்கி மெயின் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

வாரத்தில் 5 நாட்கள் வேலை அமல்படுத்த வேண்டும். 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வங்கிகள் இணைப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். வங்கிகள் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : implementation ,India Bank Employees Union ,Benson ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்காக...