×

தேனாம்படுகை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் சாலை மறியல்

கும்பகோணம்,பிப்.12: கும்பகோணத்தை அடுத்த தேனாம்படுகை கிராமத்தில் உடனடியாக நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும் எனவும் அலைக்கழிக்கும் அதிகாரிகளை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். தேனாம்படுகை கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தேனாம்படுகை, மேலப்பழையாறை, தட்டுமால்படுகை, கொட்டியபடுகை, திருமேற்றழிகை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவார்கள். இந்நிலையில், அக்கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, மாவட்ட நிர்வாகம், அறுவடை நடைபெறும் கிராமங்களில் தேவையான பகுதியில் கொள் முதல் நிலையம்,திறக்கப்படும் என்று உத்தரவிட்டதையடுத்து, விவசாயிகள் தேனாம்படுகை கிராமத்திலுள்ள கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு, அலுவலர்கள் இல்லாததால், தேனாம்படுகை கிராமத்திலுள்ள கொள் முதல் நிலையம் முழுவதும், சாலைகளில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.மேலும்,விவசாயிகளிடம் சாக்குகள் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகளை, சாலையின் ஒரத்தில், நெல் மணிகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாததால், விவசாயிகள் கடந்த 3 நாட்களாக, நேரடி நெல் கொள்முதல் நிலைய, அதிகாரிகள், திறக்கப்படும் என்று கூறியும், விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். இது போன்ற நிலையால், வேதனைக்குள்ளான விவசாயிகள், உடனடியாக தேனாம்படுகை கிராமத்தில் நேரடி நெல்கொள் முதல் நிலையத்தை, திறக்காவிட்டால், அப்பகுதி விவசாயிகளை திரட்டி, சாலை மறியல் போராட்டம் செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயி குமார் கூறுகையில்,

தேனாம்படுகை கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருவதால், மாவட்ட நிர்வாகம், அறுவடை காலங்களில் உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடுவார்கள். ஆனால் தேனாம்படுகை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில், அதிகாரிகள், கொள்முதல் நிலையம் திறக்காமல், விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலைய அதிகாரிகள், அலுவலர்கள் இல்லாமல் உள்ள நிலையில், சாக்கு மூட்டைகளையும், நெல்மணிகளை உலர்த்தும் இயந்திரத்தையும் இறக்கி வைத்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், சாக்கு மூட்டைகள், உலர் இயந்திரமும் திருட்டு போகவும் வாய்ப்புள்ளது.எனவே, கடந்த 3 நாட்களாக அலைந்து வருவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்காவிட்டால், விவசாயிகளை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : village ,Thenambadukai ,road ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...