×

வடகாட்டில் மாமியார்- மருமகள்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி

புதுக்கோட்டை, பிப். 11: தைப்பூச விழாவைெயாட்டி வடகாட்டில் மாமியார்களுக்கும், மருமகள்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதில் மாமியார் அணி வெற்றி பெற்றது. தை பூசத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பானை உடைத்தல், கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. மேலும் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடந்தது.

இதில் ஒரு பக்கம் மாமியார்களும், மறுபக்கம் மருமகள்களும் உற்சாகமாக கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர். 3 சுற்றுகளாக நடந்த போட்டியில் 2 புள்ளிகளை பெற்ற மாமியார்கள் அணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் 9 பேர் கொண்ட எரிச்சி அணி வெற்றி பெற்றது. இந்த அணியினருக்கு அதிமுக மாவட்ட மாணவரணி தலைவர் ராஜபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுவிதா ஆகியோர் பரிசு வழங்கினர். மேலும் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது.

Tags : mother-in-law ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சிக்குரிய கடையை ஏலம் எடுக்க போட்டா போட்டி