×

அரிமளம் பகுதியில் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

திருமயம், பிப். 11: புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரி மாணவர்கள் கடந்த 7ம் தேதி முதல் அரிமளம் அருகே உள்ள ராயரவம், வாசுகிபுரம், ஆயிங்குடி ஆகிய கிராமங்களில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு சேவை, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்நாள் முகாமின்போது பொதுமக்களிடம் முகாமின் முக்கியத்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நடந்த 2ம் நாள் முகாமில் ராயவரம் பஸ் ஸ்டாண்ட், நீர்வரத்து வாரிகள், நீர்நிலைகளை மாணவர்கள் சுத்தம் செய்தனர். 3ம் நாள் முகாமில் மாணவர்களும் மக்கள் சேவையும் என் தலைப்பில் ராயவரம் பசுமை இயக்க நிர்வாகி பேசினார். இதைதொடர்ந்து ஆளுமைத்திறன் மேம்படுதல் என்ற தலைப்பில் முனைவர் ராஜரெத்தினம் பேசினார். 4ம் நாள் முகாமில் ராயரவம் புது, பழைய ஊரணிகள் தூய்மைபடுத்தப்பட்டது.

இதையடுத்து சுய வேலைவாய்ப்பும் வங்கி கடன் உதவியும் என்ற தலைப்பில் முன்னணி வங்கி வழிகாட்டுனர் வீரப்பன், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சியாளர் முத்துகுமரேசன் ஆகியோர் பேசினர். மேலும் முகாமில் பங்கேற்ற மாணவர்கள், அப்பகுதி மக்களிடையே உடல் ஆரோக்கியம், தீய பழக்கத்தின் தீமைகள், ரத்த தானம், உணவு கலப்படம், முதல் உதவி, தற்காப்பு கலை, வாக்களார், சுய வேலைவாய்ப்பு, நீர் மேளாண்மை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, கல்வி வேலைவாய்ப்பு, நுகர்வோர் சட்டம் உள்ளிட்ட வழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்த முகாம் வரும் 13ம் தேதியுடன்
நிறைவடைகிறது.

Tags : State College Students' Welfare Project Camp ,Arimalam ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...