×

பொன்னமராவதி அருகே டிராக்டர் மீது பஸ் மோதல் பயணியின் கை முறிந்தது

பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பயணியின் கை முறிந்தது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (30). இவர் பொன்னமராவதி அருகே உள்ள முறுக்கபட்டியில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்ல பொன்னமராவதியில் இருந்து அரசு பஸ்சில் சென்றார். புதுக்கோட்டை ரோட்டில் சென்றபோது ஆத்தங்காடு இரட்டை குளம் அருகில் எதிரே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மீது பஸ் உரசியது.

இதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது. மேலும் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து இருந்த ஷாஜகானுக்கு வலது கை முறிந்தது. இதில் படுகாயமடைந்த ஷாஜகான், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காரையூர் சப்இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் வழக்குப்பதிந்து அரசு பஸ் டிரைவர் ரேணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : passenger ,Ponnamaravathi ,
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...