×

சிவகங்கையில் நடந்த மாநில கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவன் வெற்றி

பொன்னமராவதி, பிப். 11: சிவகங்கையில் அகில இந்திய கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பொன்னமராவதி பழனியப்பா அரசு தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவன் விஷ்வாமுகில் எட்டு வயது பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
அன்பு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 3ம் வகுப்பு மாணவன் தேசிகன் 7 வயது பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அமல அன்னை மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் ஹரிபிரகாஷ் 13 வயது பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன், வலையபட்டி பழனியப்பா அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி, அமலா அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம், துணை முதல்வர் பிரின்ஸ், அன்பு நர்சரி பள்ளி முதல்வர் சசிகலா, ஆகியோர் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோரை பாராட்டினர்.

Tags : State school student ,state karate competition ,Sivaganga ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...