×

விராலிமலை- மதுரை நெடுஞ்சாலை கொடும்பாளூரில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்


விராலிமலை, பிப். 11: விராலிமலை- மதுரை நெடுஞ்சாலையில் கொடும்பாளூரில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டுமென ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார். விராலிமலை ஒன்றியக்குழு முதலாவது கூட்டம் நேற்று நடந்தது. விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் காமுமணி தலைமை வகித்தார். துணை தலைவர் லதா இளங்குமரன் முன்னிலை வகித்தார். ஆணையர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த அய்யப்பன், மணிகண்டன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்யா, சுயேட்சை உறுப்பினர் மதியழகன், திமுகவை சேர்ந்த முத்துலட்சுமி, கண்ணன் ஆகியேர் பேசுகையில், தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சாலை வசதி, சமுதாய கூடம், வரத்துவாரி தூய்மை செய்தல் மற்றும் புதிய ரேஷன் கடை அமைத்தல் குறித்து வலியுறுத்தினர்.

திமுகவை சேர்ந்த சத்தியசீலன் பங்கேற்று அவரது ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மேற்கொள்ள வேண்டிய சாலை பணிகள் குறித்து பேசினார். திமுகவை சோ;ந்த அன்பழகன் பங்கேற்று விராலிமலை- மதுரை நெடுஞ்சாலையில் கொடும்பாளூரில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. எனவே கொடும்பாளூரில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க மேம் பாலம் அமைக்க வேண்டும் என்றார். முன்னதாக செலவு குறித்து 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய ஆணையர் ரமேஷ், உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நன்றி கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் முதியோர் உதவிதொகை வேண்டும்
முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தனித்தனியாக மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 60 வயதை தாண்டிய முதியவர்கள். எங்களால் இந்த வயதில் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : bridge ,Viralimalai - Madurai Highway ,Kodumballoor ,accidents ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!